Snippet #19 தங்கிலீஷில் ஒரு பதிவு!

“என்ன நீ ,
தமிழ் படம் பார்ப்பே ,
தமிழ் சாங்ஸ் கேட்பே ,
தமிழில் தான் பேசவும் செய்யுற .
ஆனா தமிழ் ல ஒரு Snippet கூட போட மாட்டுறியே ”
என்று வீடுக்காரர் ஒரு தினுசாய் சுட்டி காட்ட ,
“அட! ஆமா ல! ஏன் ஒரு தமிழ் பதிவை publish பண்ண கூடாது”
என்று ஏனோ எனக்கும் தோன்றியது .
(Spoiler alert!) ஆனால் எப்படி எழுதுவது என்ன எழுதுவது
என்று தான் கடைசி வரை விளங்கவில்லை .
தாய் சொல்லி தந்த
தத்தக்க பித்தக்க தமிழில் எழுதினால்
இலக்கண ignorance எல்லாம் வெளியில் தெரிந்து விடும் .
தந்தை வழி கற்ற மதுரைத் தமிழில்
வந்தாப்ல போனாப்ல என்பதை தவிர
வேறொன்றும் எனக்கு ஒட்டவில்லை .
கலப்பு மணம் செய்து கற்றுக்கொண்டது
மலையாள வாசமடிக்கும் அந்யஷிக்கான் அறிஞ்ஞ வார்த்தைகளே .
பேசாமல் மதம் பற்றி எழுதி விடலாமா?
அப்படியானால் பிறந்த வீட்டில் கற்ற கீதையை பற்றி எழுதவா ?
சென்ற பள்ளியில் படித்த பைபிள் வாக்கியம் கூறவா?
இல்லை, என்னருமை ardent ரீடர் uncle S ஐ impress செய்ய நபியின் புகழை பாடவா?
வேண்டாம் வேண்டாம்! மதமும் ஜாதியும்
Motherhood journey இல் எதற்கு ?
நான்கு வருடம் சோறு போட்ட சென்னை தமிழில்
ரெண்டு வார்த்தை எழுதி முடித்து விடவா?
இல்லை சேலத்து நண்பனின் Coimbatore மனைவியிடம்
பேசி பேசி தொற்றிக்கொண்ட
மரியாதை தமிழில் தொடரவா?
எதற்கைய்யா இந்த வீண் வம்பு !!
தமிழ் வளர்க்க பாப்பையா வை போன்றோர்
நாட்டில் நிறைய உண்டு .
க ச ட த ப ற வில்
வள்ளியும் சுள்ளியும் போட தெரியாத
நான் எழுதும் கொச்சை தமிழா
செம்மொழியை பறை சாற்ற போகிறது !
ஆனாலும் ஒரு நப்பாசையில்
Publish button ஐ பட்டென்று தட்ட
ஆசையாய் கட்டை விரல் உருண்டோட ,
Screen ஐ எட்டி பார்த்து
Shock ஆன கணவனின் கண்களில் தெரிந்தது
Wordpress இல் நான் பெறப்போகும் சவுக்கடிகள்!!!!!

Advertisements

18 thoughts on “Snippet #19 தங்கிலீஷில் ஒரு பதிவு!

Add yours

  1. தங்கிலீஷிலும் புகுந்து விளையாடற கண்ணு.தமிழோ, இங்கிலீசோ, மனசுல நினெச்சதை கவரும் வார்த்தைகளா கொட்டுறதுல நீ ஒரு கில்லாடிதான்!

    Liked by 3 people

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: